ADDED : மார் 26, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 3,468 ஓட்டுச்
சாவடிகளில் பணிபுரிய, 16,648 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்களை தேர்வு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி முன்னிலையில், கணினி வழியில் நடந்த குலுக்கல் முறையில், சட்டசபை தொகுதி வாரியாக, அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
