/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சரிடம் சில்மிஷ புகார் கூறிய மாணவியர் அரசு பள்ளியில் 3 துறை அதிகாரிகள் விசாரணை
/
அமைச்சரிடம் சில்மிஷ புகார் கூறிய மாணவியர் அரசு பள்ளியில் 3 துறை அதிகாரிகள் விசாரணை
அமைச்சரிடம் சில்மிஷ புகார் கூறிய மாணவியர் அரசு பள்ளியில் 3 துறை அதிகாரிகள் விசாரணை
அமைச்சரிடம் சில்மிஷ புகார் கூறிய மாணவியர் அரசு பள்ளியில் 3 துறை அதிகாரிகள் விசாரணை
ADDED : செப் 24, 2024 03:02 AM
பள்ளிப்பாளையம்: அலமேடு அரசு பள்ளி மாணவியர், சில்மிஷ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் காரை முற்றுகையிட்டு புகாரளித்தனர். இதையடுத்து, நேற்று, மூன்று துறையை சேர்ந்த அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அலமேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 21ல் அப்பகுதியில் நடந்த அரசு விழாவிற்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா ஆகியோரின் காரை, மாணவியர், பெற்றோர் முற்றுகையிட்டனர். அப்போது, தலைமை ஆசிரியர் மற்றும் சில
ஆசிரியர்கள், தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரளித்தனர்.இதையடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினர். இதையறிந்த மாணவியரின் பெற்றோர், 100க்கும்
மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டனர். அவர்களை வகுப்பறைக்குள் அழைத்துச்சென்ற அதிகாரிகள், பள்ளி செயல்பாடு, தலைமையாசிரியர், ஆசிரியர்களின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். பின், மாணவியர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரணை அறிக்கையை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், அதன்படி நவடிக்கை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விசாரணை, நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை,
4:00 மணி வரை நடந்தது. இதனால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.