/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசு மாடுகள் மர்மச்சாவு மூதாட்டி அதிர்ச்சி
/
பசு மாடுகள் மர்மச்சாவு மூதாட்டி அதிர்ச்சி
ADDED : மே 29, 2025 01:34 AM
மேட்டூர் :மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி, எருமப்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 52. கணவர் இறந்த நிலையில், மகன், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். செல்வி, அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்கிறார். வீடு அருகே, சிந்து பசுமாடுகள் - 4 வளர்த்தார்.
நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடியது. பொக்லைன் மூலம் வீட்டுக்கு கொண்டு வந்து வாசல் முன் போட்ட நிலையில் இரவில் பசு இறந்து விட்டது. நேற்று காலை வீட்டில் கட்டியிருந்த, 3 பசு மாடுகளும், தொட்டியில் கழுநீர் குடித்தன.
அதில் இரு மாடுகள் மதியம் இறந்ததால் செல்வி அதிர்ச்சி அடைந்தார். நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காளிகவுண்டர் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள், இறந்த மாடுகளின் உடல் பாகங்களை அகற்றி ஆய்வுக்கு அனுப்பினர். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பசு மாடுகள் இறந்தது குறித்து, செல்வி புகார்படி மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.