/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர், நிர்வாகிகள் ஆலோசனை
/
தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர், நிர்வாகிகள் ஆலோசனை
தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர், நிர்வாகிகள் ஆலோசனை
தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர், நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : பிப் 26, 2024 01:46 PM
சேலம்,: சேலத்தில், தி.மு.க., சார்பில் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆறு பகுதிகளில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. செவ்வாய்பேட்டை, அரிசிப்பாளையம், பொன்னம்மா பேட்டை, அஸ்தம்பட்டி, குமாரசாமிப்பட்டி, கன்னங்குறிச்சி என ஆறு பகுதிகளில், அடுத்தடுத்து கூட்டம் தனித்தனியே நடத்தப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், மத்திய மாவட்ட செயலருமான வக்கீல் ராஜேந்திரன் அனைத்து கூட்டத்திலும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை எடுத்துரைத்தார்.
மத்திய அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியுதவியை வழங்காமல் மறுத்து வருவதை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். அத்துடன் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பற்றி பிரசாரம் செய்து, கடந்த இரண்டரை ஆண்டில், தி.மு.க., அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேச வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து, சேலம் லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளரை, 7 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய, இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
மாநகர் செயலர் ரகுபதி, வடக்கு தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், பகுதி செயலர்கள் பிரகாஷ், ராஜா, மோகன், பொறுப்பாளர்கள் சரவணன், மணி, முருகன், செரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

