ADDED : ஆக 20, 2026 03:09 AM
சேலம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெங்களூரு - திருவ-னந்தபுரம் ரயில், ஆக., 20(இன்று) மாலை, 5:10க்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணா-குளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்-கனுார், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்-கோட்டை, கொல்லம், வர்க்கலா வழியே, மறுநாள் காலை, 10:00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
இன்று இரவு, 9:25க்கு சேலம், 10:30க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 22 மதியம், 12:40 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 6:00 மணிக்கு பெங்களூருவை அடையும். 22 இரவு, 10:20க்கு ஈரோடு, 11:25க்கு சேலம் வந்து செல்லும்.
அதேபோல் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில், ஆக., 21(நாளை), 28 ஆகிய நாட்களில் இரவு, 11:50க்கு புறப்-பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, ஷொரனுார், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணுார், பையனுார், நீலேஸ்வரம், காஞ்சங்காடு, காசர்கோடு வழியே, மறுநாள் மாலை, 5:00 மணிக்கு மங்களூருவை அடையும். அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு வந்து செல்லும். மறு-மார்க்க ரயில், ஆக., 22, 29 இரவு, 7:15க்கு கிளம்பி, அடுத்-தநாள் காலை, 11:35க்கு சென்னையை அடையும். மறுநாள் அதி-காலை, 5:05க்கு ஈரோடு, 6:07க்கு சேலம் வந்து செல்லும்.
நேரம் மாற்றம்
இன்று முதல், மங்களூரு சென்ட்ரல் -- சென்னை சென்ட்ரல் ரயில், காட்பாடிக்கு அதிகாலை, 3:48க்கு பதில், 3:43க்கும், வாலாஜா ரோடுக்கு, 4:08க்கு பதில், 4.03க்கும் வந்தடையும். அரக்கோணத்துக்கு, 4:40க்கு பதில், 4:38க்கும், திருவள்ளூருக்கு, 5:05க்கு பதில், 5.03க்கும் வந்தடையும். மேட்டுப்
பாளையம் -- சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், காட்பாடிக்கு அதிகாலை, 4:08க்கு பதில், 3:53க்கும், அரக்கோ-ணத்துக்கு, 4:53க்கு பதில், 4:43க்கும் வந்தடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
