ADDED : ஆக 21, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அடுத்த, திப்பம்பட்டியில் பா.ஜ., சார்பில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன், 254வது குருபூஜை விழா நேற்று நடந்தது. கிளை தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார்.
திப்பம்பட்டி பஸ் ஸ்டாப்பில் வைக்கப்பட்ட ஒண்டிவீரன் படத்துக்கு, அக்கட்சி நிர்வாகிகள், ஊர் மக்கள், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோட், பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், ஒன்றிய முன்னாள் பொதுச்செயலர் தமிழ்நேசன், மண்டல பிரதிநிதி மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

