ADDED : செப் 07, 2026 01:22 AM
அ நிறம் | அளவு
சேலம்: எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 8:30 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷன், 5வது நடைமேடைக்கு வந்தபோது, ஒருவர் தண்டவாளத்தை கடந்து, 4வது நடைமே-டைக்கு செல்ல முயன்றார். அப்போது, நடைமேடை, தண்ட-வாளம் இடையே சிக்கிய அவர், இன்ஜினில் மாட்டிக்கொண்டு சிறிது துாரம் இழுத்துச்செல்லப்பட்டார்.
இதில் உடல் நசுங்கி பலியானார். சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்ததும் தெரிந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
