/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1 கி.மீ.,க்கு ஒரே விளக்கு வழிப்பறிக்கு வழிவகுப்பு
/
1 கி.மீ.,க்கு ஒரே விளக்கு வழிப்பறிக்கு வழிவகுப்பு
ADDED : ஆக 25, 2025 03:48 AM
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியம் நாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து மூடுதுறை ஊராட்சி அலுவலகம் வரை, 1 கி.மீ.,க்கு, ஒரு தெரு விளக்கு மட்டும் உள்ளது.
சாலை இருபுறமும் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால், இரவில் பெண்கள் நடந்து செல்லும்போது, 'குடி'மகன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். தவிர வழிப்பறிக்கு வழி வகுக்கிறது. அருகே உள்ள தோட்டங்களில் இருந்து, பாம்புகள் சாலை குறுக்கே வருவதால் ஒரு வித அச்சத்துடன் மக்கள் நடந்து செல்கின்றனர்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் தடுமாறுகின்றனர். அசம்-பாவிதம் ஏற்படும் முன், போதிய எண்ணிக்கையில் தெரு விளக்-குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1,000 மரக்கன்று நடல்தாரமங்கலம்: தாரமங்கலம், துட்டம்பட்டி கரட்டுக்காடு மற்றும் இடையப்-பட்டி ஏரியில், 1,000 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இயற்-கைத்துளி சமூக சேவகன் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாண-வர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், மரக்கன்றுகளை நட்-டனர்.