ADDED : அக் 24, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், கேரள மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமார், 45. இவர், கே.ஆர். தோப்பூர் கந்தபிச்சனுாரில் உள்ள அக்கா சரோஜினி வீட்டுக்கு சமீபத்தில் வந்தார். கடந்த, 18 நள்ளிரவு, 12:30 மணக்கு, கே.ஆர்.தோப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை, 3 பேர் பீர் பாட்டிலால் தாக்கி, அவரிடம் இருந்த, 2 பவுன் சங்கிலி, 10,500 ரூபாயை பறித்தனர்.
அப்போது அங்குவந்த கிருஷ்ணகுமாரின் மாமா சின்னண்ணன் தட்டிக்கேட்க அவரையும் தாக்கினர். கிருஷ்ணகுமார் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, கருக்கல்வாடி, மண்காட்டை சேர்ந்த அஜித்தை நேற்று கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர்.

