ADDED : டிச 14, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெங்காயம் பாதிப்புவிவசாயிகள் கவலை
பனமரத்துப்பட்டி, டிச. 14-
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் உள்ள நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி, சந்தியூர், பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக சின்னவெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக மழையால், வெங்காய வயல்களில் தொடர்ந்து ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், வெங்காய வேர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெங்காய தாள் மடிந்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.