/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை
/
500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை
500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை
500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை
ADDED : அக் 28, 2024 04:39 AM
சேலம்: வரும், 31ல் தீபாவளியை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று முதல், நவ., 4 வரை, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. அதேபோல் புற-நகர் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படு-கின்றன. இந்த மாவட்டங்களில் இருந்து நகர பகுதிகளிலும் நாளை முதல், 4 வரை, பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.அதேபோல் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, ஓசூர், மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்-பரம், காஞ்சிபுரம், பெங்களூரு; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுவை, கடலுார், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாமக்கல்லில் இருந்து சென்னை; ஈரோட்டில் இருந்து பெங்க-ளூரு; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூர்; மதுரையில் இருந்து ஓசூர் உள்ளிட்ட பகுதிக-ளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவ-ரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்யப்படுவதால், பயணியர், கூட்ட நெரி-சலை தவிர்த்து பயணிக்க, நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு பஸ் இயக்கம் முடியும் வரை, அனைத்து முக்-கிய பஸ் ஸ்டாண்டுகளில் போக்குவரத்தை கண்காணிக்க, சீர்ப-டுத்த, அலுவலர்களுக்கு, 24 மணி நேர பணி ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. பயணியர், பஸ்களில் பட்டாசு கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதை கண்காணிக்க பஸ் ஸ்டாண்டுகளில் நேர கண்காணிப்பாளர், பயணச்சீட்டு பரிசோதகர், கண்டக்டர், பஸ்களில் பயணிப்போரின் உடைமைகளை கண்காணிக்க உத்தர-விடப்பட்டுள்ளது.