ADDED : டிச 07, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், 4 ரோடு, கோவிந்த கவுண்டர் தோட்டத்தில், சந்துக்கடையில் மதுபானம் விற்கப்படுகிறது. தவிர அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை கண்டித்து, அப்பகுதி மக்கள், நேற்று அதே பகுதியில் திரண்டனர். பள்ளப்பட்டி போலீசார்,
மக்களிடம் பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள் கூறுகையில், 'இங்குள்ள காட்டுவளவு மார்க்-கபந்து சாலையில் டாஸ்மாக் கடை திறக்க, அதிகாரிகள்
இடம் தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே, 24 மணி நேரமும் சந்துக்கடை உள்ளதால், பல்வேறு குற்றச்சம்பவங்கள்
நடக்கின்றன. சந்துக்-கடை, டாஸ்மாக் கடை வேண்டாம்' என்றனர். அதற்கு உரிய நட-வடிக்கை எடுப்பதாக போலீசார்
கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.