ADDED : மார் 16, 2026 07:49 AM
அ நிறம் | அளவு
சேலம்: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்தார்.
தொடர்ந்து, அவரது அணியை சேர்ந்த, சேலம் மத்திய மாவட்ட செயலர் ஜெய்சங்கர் தலைமையில், அவைத்தலைவர் ராஜேந்திரன், இணை செயலர் புஷ்பவல்லி உள்பட, 200க்கும் மேற்பட்டோர், அஸ்தம்பட்டி அருகே உள்ள அமைச்சர் ராஜேந்திரன் இல்லத்தில், அவரை சந்திந்து, தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து, அமைச்சர் வாழ்த்தினர்.
