/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் இ.பி.எஸ்.,சிடம் ஐக்கியம்
/
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் இ.பி.எஸ்.,சிடம் ஐக்கியம்
ADDED : செப் 15, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக செயல்பட்ட, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் மாரப்பன், கோபி, மேற்கு ஒன்றிய செயலர் ரமேஷ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலர் கார்த்தி, கோபி கிழக்கு
ஒன்றிய செயலர் ஆறுமுகம், பொருளாளர் தீபக் உள்பட, 50க்கும் மேற்பட்டோர்,
அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம், நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது.
அதில் அவர்கள், பொதுச்செயலர், இ.பி.எஸ்., முன்னிலையில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு, இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாட்டை, மேட்டுப்பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநில அம்மா பேரவை துணைச்செயலர் சிவக்குமார் செய்திருந்தனர்.