/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்வித்துறை பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல்
/
கல்வித்துறை பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல்
ADDED : ஜன 23, 2026 04:50 AM
சேலம்: கல்வித்துறை பணியாளர்களுக்கு, விருப்ப மாறுதல் கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது.
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியாளர் பணியிடங்க-ளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கல்வித்துறைக்கென தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர-கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேரடி நியமனத்துக்கு முன், ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்களுக்கு, விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, மாறுதல் பெற்று ஓராண்டுக்கு மேல் பணிபுரியும், கல்வித்துறை பணியாளர்களிடமிருந்து, விருப்ப மாறுதல் விண்-ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இன்று மாலை வரை விருப்ப மாறுதல் பெயர் பட்டியலை இறுதி செய்ய, கால அவ-காசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் அடிப்படையில், இன்னும் ஓரிரு தினங்களில், விருப்ப மாறுதல் கவுன்சலிங் நடை-பெற உள்ளது.

