/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நிரவல் நடத்த உத்தரவு
/
அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நிரவல் நடத்த உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நிரவல் நடத்த உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நிரவல் நடத்த உத்தரவு
ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடம் கணக்கிடப்பட்டு உபரியாக உள்ள பணியிடங்கள், பற்றாக்குறை பள்ளிகளுக்கு மாற்றப்படும்.
ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் நிர்வாகம் என்பதால் ஆசிரியர்களை மாற்றுவதில் தயக்கம் காட்டப்பட்டது.தற்போது தணிக்கையில் உபரி ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் எழுவதால் நடப்பாண்டு பணிநிரவல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 31ல் ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற உள்ளதால் அன்றைய நிலவரப்படி உபரி ஆசிரியர் பணியிடங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டு மேலாண் பள்ளிகளில் அவர்களுக்குள் பணி நிரவல் செய்து கொள்ள, வரும், 15 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நிரவல், வரும், 30ல் நடத்தப்பட உள்ளது.

