ADDED : செப் 14, 2024 03:29 AM
சேலம்: சட்டப்படி தொழிற்சாலை, மோட்டார் போக்குவரத்து, மலை தோட்ட நிறுவனங்கள், உணவு, கடை, வணிகம் உள்ளிட்ட பல்-வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் தமிழக தொழிலாளர் நல நிதி சட்டப்படி, ஆண்டுதோறும் அவரவர் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்-களுக்கும், தொழிலாளர் நல நிதி தொழிலாளியின் பங்காக, 20, நிறுவன பங்காக, 40 என, 60 ரூபாய் வீதம் தொழிலாளர் நல வாரி-யத்துக்கு செலுத்த வேண்டும்.
இதற்கு வெப் போர்டல், 'lwmis.lwb.tn.gov.in' உருவாக்கி பயன்பாட்-டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை அளிப்போர், நிறுவனங்களை பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி உடனே ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்-ளலாம். 2024ம் ஆண்டு தொழிலாளர் நல நிதி, கொடுபடாத்-தொகை போன்றவற்றை இணைய வழியாக செலுத்திட கேட்டுக்-கொள்ளப்படுகிறது. வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும், வெப் போர்டலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழி-லாளர் நல நிதி செலுத்தாதவர், நிறுவனம் தொடங்கிய ஆண்டில் இருந்து நல நிதி செலுத்த வேண்டும் என, தமிழக தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.