/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிர்ணயிக்கும் வாடகையை செலுத்த வேண்டும் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவு ஓமலுார், நவ. 22-- காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்கட்ரமணர் கோவில் நிலத்தில், குறிப்பிட்ட சர்வே எண்ணில், 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளதால் அகற்ற வேண்டும் என, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தில்

ADDED : நவ 22, 2024 01:34 AM
நிர்ணயிக்கும் வாடகையை செலுத்த வேண்டும்
கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவு
ஓமலுார், நவ. 22--
காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்கட்ரமணர் கோவில் நிலத்தில், குறிப்பிட்ட சர்வே எண்ணில், 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளதால் அகற்ற வேண்டும் என, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் காலிமனைகள், கட்டட பகுதிகளை, குடியிருப்புக்கு கூட்டாக ஆக்கிரமித்து பயன்படுத்துவோரை, வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்தி, 12 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில் மண்டபத்தில், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி தலைமையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் சென்னையில் இருந்து, அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது, 'கோவில் நிலத்தில் குடியிருப்போர், அரசு நிர்ணயிக்கும் வாடகை தொகையை செலுத்த வேண்டும். அதில் உடன்பாடு இல்லாதவர்கள், சட்டத்துக்குட்பட்டு வெளியேற்றப்படுவர். விரைவில் கட்டணத்தொகை நிர்ணயிக்கப்படும்' என்றார்.
அதற்கு அன்றாட கூலி வேலை செய்து பிழைக்கும், 10 குடும்பத்தினர், 'எங்கள் வாழ்வாதாரம் கருதி, குறைந்த வாடகை நிர்ணயிக்க வேண்டும்' என்றனர். அறநிலையத்துறை தாசில்தார் ஜெயவேல், கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன்(பொ) உடனிருந்தனர்.