/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலத்தில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
/
பாலத்தில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 13, 2024 03:25 AM
சேலம்:பெங்களூருவில்
பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்ட லாரி, திருப்பூர் நோக்கி சென்று
கொண்டிருந்தது. நேற்று மாலை, 6:30 மணிக்கு, சேலம், கந்தம்பட்டி
மேம்பாலத்தில் சென்றபோது, அதன் டிரைவர், திடீரென 'பிரேக்' போட, லாரி
தலைகுப்புற கவிழ்ந்தது.
காயம் அடைந்த டிரைவர், சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரி கவிழ்ந்ததால், சாலை
இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர்,
போலீசார், லாரியை அகற்றினர். ஆனால் இச்சம்பவத்தால்
கொண்டலாம்பட்டியில் இருந்து, ஏ.வி.ஆர்., ரவுண்டானா வரை வாகனங்கள்
அணிவகுத்து நின்றன. இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு
வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

