ADDED : மார் 11, 2026 07:44 AM
அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம்,
மின்னாம்பள்ளி அருகே செல்லியம்-பாளையம் அருந்ததியர் காலனியை
சேர்ந்த, 'பினாயில்' வியா-பாரி கஜேந்திரன், 44. இவர் நேற்று முன்தினம்
இரவு, செல்லி-யம்மன் கோவில் அருகே நின்றிருந்தபோது, பைக்கில் வந்த, 3
பேர், கத்தியால் கஜேந்திரனை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல்
சத்தம் கேட்டு, மக்கள் ஓடிவர, 3 பேரும் தப்பினர். படு-காயம் அடைந்த
கஜேந்திரன், கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி கலைவாணி புகார்படி,
காரிப்பட்டி போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில்
செல்லி-யம்பாளையத்தை சேர்ந்த பெயின்டர் பாரதி, 25, என்ற வாலி-பரை
நேற்று கைது செய்து, மேலும் இருவரை தேடுகின்றனர்.
போலீசார்
கூறுகையில், 'சம்பவ நாளன்று மதியம், கூட்டாத்துப்-பட்டியை சேர்ந்த
ஜெகன், செல்லியம்பாளையம் வந்தபோது, 'எங்கள் பகுதிக்கு நீ எதற்கு
வந்தாய்' என கஜேந்திரன் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அதில்
தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில், அன்று இரவு ஜெகன்,
நண்பர்களுடன் இணைந்து கத்தியால் வெட்டியது தெரியவந்தது'
என்றனர்.
