ADDED : அக் 12, 2026 02:14 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், மரவனேரி, ராஜா நகரை சேர்ந்த பெயின்டர் ராமச்சந்திரன், 38. இவர் கடந்த செப்., 13ல் நடந்து சென்றபோது, ஜான்சன்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 31, வழிமறித்து தகராறு செய்து, அவரது மனைவியை பற்றி அவதுாறு பேசியுள்ளார்.
அதை தட்டிக்கேட்ட ராமச்சந்திரனை பேனா கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். காயம் அடைந்த ராமச்சந்திரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வாக்குமூலப்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.
