ADDED : ஆக 19, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்:சேலம்,
கொண்டலாம்பட்டி, பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த, கோவிந்தராஜ் மகன்
வீரசிம்மன், 34. பெயின்டரான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று
காடையாம்பட்டி, சந்தைத்தடம் பகுதியில் வேலைக்கு சென்றார். அங்கு
மதியம், 3:15 மணிக்கு, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையை, நடந்து
கடக்க முயன்றார்.
அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த
டாரஸ் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் வீரசிம்மன் உயிரிழந்தார்.
உடலை கைப்பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
