ADDED : மே 17, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தை சேர்ந்த, சக்திவேல் மகன் அருண்குமார், 20. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் வாழப்பாடி நோக்கி, 'எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.
மாலை, 6:00 மணிக்கு, வாழப்பாடி, அண்ணா நகர் அருகே சென்-றபோது, எதிரே பேளூர் நோக்கி வந்த, சரக்கு வேன், அருண்-குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்கு-மாரை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
