/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பங்க் ஊழியரை தாக்கிய பெயின்டருக்கு 'காப்பு'
/
பங்க் ஊழியரை தாக்கிய பெயின்டருக்கு 'காப்பு'
ADDED : பிப் 12, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அம்மாபேட்டை அடுத்த நஞ்சம்பட்டியை சேர்ந்த பெயின்டர் சங்கர், 53. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, 'போதை'யில், அம்மாபேட்டை சந்திப்பில் உள்ள பங்க்கில், மொபட்டுக்கு, 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் தராமல், அதன் ஊழியர் தவமணி, 55, என்பவரை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பினார்.
படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து, நேற்று சங்கரை கைது செய்தனர்.

