/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் விழாவில் தகராறு பழனிசாமி பேனர் கிழிப்பு
/
கோவில் விழாவில் தகராறு பழனிசாமி பேனர் கிழிப்பு
ADDED : செப் 06, 2025 02:47 AM
தலைவாசல்:மாரியம்மன், கருப்பண்ணார் கோவில் திருவிழாவின் போது, இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி படத்துடன் இருந்த பேனர் கிழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம், தலைவாசல், புத்துார் ஊராட்சி விநாயகர் நகரில், மாரியம்மன், கருப்பண்ணார் கோவில் திருவிழாவில் நேற்று முன் தினம் இரவு, இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
தொடர்ந்து, ரவி என்பவர் புகாரிலும், வைத்தீஸ்வரன் என்பவர் புகாரிலும், தலா, 10 பேர் மற்றும் பலர் என, தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்தனர். அங்கு, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது.
இதனால் நேற்று, அ.தி.மு.க., நிர்வாகி பால சுப்ரமணியன், போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'மாரியம்மன், கருப்பண்ணார் திருவிழாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ., நல்லதம்பி உள்ளிட்டோர் படங்களுடன் வைத்திருந்த பேனரை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
இதுகுறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.