/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பனமரத்துப்பட்டி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வின் கோட்டை'
/
'பனமரத்துப்பட்டி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வின் கோட்டை'
'பனமரத்துப்பட்டி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வின் கோட்டை'
'பனமரத்துப்பட்டி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வின் கோட்டை'
ADDED : டிச 29, 2025 09:54 AM
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க., சார்பில் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் வீரர் ஆலோசனை கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.
வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலில், இத்தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்,'' என்றார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''2026ல் முதல் நிகழ்ச்சியாக, ஜன., 4ல், வீரபாண்டி தொகுதியில் பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேச உள்ளார். 50,000 பேர் பங்கேற்கின்றனர். இத்தொகுதியில் உள்ள, 4 டவுன் பஞ்சாயத்துகளில், பனமரத்துப்பட்டி, அ.தி.மு.க.,வின் கோட்டை,'' என்றார்.
சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, நகர செயலர் சின்னதம்பி, நகர அம்மா பேரவை செயலர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

