ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் : பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, 4வது வார்டு, ராமமூர்த்தி நகரில் தனியார் கட்டடத்தில், பகுதி நேர நுாலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நுாலகத்தை திறந்து வைத்தார். அதில் முதல்கட்டமாக, 300 புத்தகங்கள் வழங்கப்பட்டன. சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கிய நிலையில், அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், நுாலகம் கட்டப்படும் என, அலுவலர்கள் தெரிவித்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் பொன்னுவேல், செயல் அலுவலர் ரேணுகா, மாவட்ட நுாலகர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.