/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை
/
ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை
ADDED : அக் 07, 2024 03:06 AM
சேலம்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்-கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்க மாநில செயலர் பெரியசாமி அறிக்கை: பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்-டத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, 3 மாதமாக ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டது.
செப்டம்பர் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி கல்வி துறையில் உடற்-கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்-வியல் கல்வி, இசை போன்ற துறைகளில், 16,549 ஆசிரியர்கள் பகுதி நேரமாக, 2012ல் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது, 11,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், 12,500 ரூபாய் மாத ஊதியம் பெறுகின்றனர்.புது கல்வி கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதற்கு அழுத்தம் கொடுக்கவே, பள்ளி கல்வி துறைக்கு ஒதுக்கப்பட்ட, 2,165 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஆசிரியர்கள், அலு-வலர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். ஆசிரியர் வாழ்வாதாரம், மாணவர்கள் நலன்கருதி மத்திய அரசு, நிதியை உடனே விடுவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதனால் கோரிக்கையை தாமதமின்றி அரசு ஏற்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்-துள்ளார்.