/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி - பஸ் மோதி விபத்து பயணியர் காயம்
/
லாரி - பஸ் மோதி விபத்து பயணியர் காயம்
ADDED : அக் 16, 2025 07:56 PM
ஆத்துார்: ஆத்துார் அருகே ஆம்னி பஸ், டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில், பயணியர் காயமடைந்தனர்.
நாமக்கல், புதுச்சத்திரத்தை சேர்ந்த, டிரைவர் அசோக்குமார், 35. இவர், சென்னையில் இருந்து, சேலம் நோக்கி, 'ஏர் இண்டியா' ஆம்னி பஸ்சை ஓட்டி வந்தார். 35 பேர் பயணித்தனர். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, ஆத்துார் புறவழிச்சாலை, உப்பு ஓடைப் பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்புறம் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம், பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் படுக்கையில் பயணித்த, குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்தி, 32, என்பவர், பக்கவாட்டு கண்ணாடி உடைந்து, அதன் வழியே பஸ்சின் வெளியே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தவிர, ஐந்து பயணியர் காயம் அடைந்தனர். ஆம்னி பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.