ADDED : ஏப் 24, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
சேலம்: திருப்பத்துார் - சேலம் இடையே உள்ள தொட்டம்பட்டியில், வழித்தட பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளன.
இதனால், அன்றைய தினம் மதியம், 2:45க்கு புறப்படும், ஜோலார்பேட்டை - ஈரோடு பயணியர் ரயில், 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
