/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில் பெட்டிகளில் குளிப்பதை பயணியர் தவிர்க்க அறிவுரை
/
ரயில் பெட்டிகளில் குளிப்பதை பயணியர் தவிர்க்க அறிவுரை
ரயில் பெட்டிகளில் குளிப்பதை பயணியர் தவிர்க்க அறிவுரை
ரயில் பெட்டிகளில் குளிப்பதை பயணியர் தவிர்க்க அறிவுரை
ADDED : டிச 13, 2024 01:43 AM
சேலம், டிச. 13-------
புனித யாத்திரை காலங்களில், ரயில் பெட்டிகளில் குளிப்பதை, பயணியர் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
சேலம் ரயில்வே கோட்டம் வழியே பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் சில பயணியர், குறிப்பாக புனித யாத்திரை காலங்களில் பெட்டிகளிலேயே குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது தவறானது. பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீர், கழிப்பறைகள், பொது பயன்பாட்டுக்கு மட்டுமே. அந்த நீரை குளிக்க பயன்படுத்துவதால், சக பயணியருக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கழிப்பறைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும்.
அதேபோல் கற்பூரம், வேறு ஏதும் தீ பற்ற வைப்பது உள்ளிட்டவை, ரயில்கள், ஸ்டேஷன் வளாகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பயணியர் எரியக்
கூடிய, வெடிக்கும் பொருட்களை வைத்திருந்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் உதவி, பாதுகாப்பு தொடர்பானவைக்கு, 139 என்ற எண்ணை அழைக்கலாம்.

