/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலுங்கி குலுங்கி செல்லும் பஸ்களால் பயணியர் பதறல்; ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
அலுங்கி குலுங்கி செல்லும் பஸ்களால் பயணியர் பதறல்; ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அலுங்கி குலுங்கி செல்லும் பஸ்களால் பயணியர் பதறல்; ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அலுங்கி குலுங்கி செல்லும் பஸ்களால் பயணியர் பதறல்; ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2024 01:17 AM
ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு சாலை, குண்டும், குழியு-மாக உள்ளதால், பஸ்கள் அலுங்கி குலுங்கி செல்கின்றன. இதனால் பயணியர் பதறுவதால் சாலையை சீரமைக்க வலியுறுத்-தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, சென்னை, விழுப்-புரம், கடலுார், புதுச்சேரி, ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் மப்சல் பஸ்கள் இயக்கப்-படுகின்றன. அத்துடன் தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி பகுதிகளுக்கு டவுன் பஸ்களும் இயக்-கப்படுகின்றன. இதனால் தினமும், 90 தனியார் பஸ்கள், 310 அரசு பஸ்கள் என, 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 24 மணி நேரமும் பஸ்கள் செல்வதால், பயணியர் கூட்டம் எப்போதும் காணப்படும்.
ஆனால் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் நுழைவு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. குறிப்பாக பஸ் வெளியேறும் சாலை மிக மோசமாகி, 5 இடங்களில் பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. அந்த வழியே செல்லும் பஸ்கள், பள்ளத்தில் ஏறி இறங்கி செல்லும்போது, பயணியர் பதறுகின்றனர். அதுதவிர இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அச்சாலையை சீரமைக்க, பயணியர் வலியுறுத்தி உள்-ளனர். மேலும் பஸ்சுக்கு சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்ப-தாக, டிரைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த, 10வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஜீவா கூறுகையில், ''பஸ் ஸ்டாண்ட் உட்புற சாலை, பஸ் வெளியே செல்லும் சாலை என, 200 மீ.,க்கு மோசமான நிலையில் உள்ளதால் அவற்றை சீரமைக்க, நகராட்சி தலைவர், கமிஷனரிடம் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறு-கையில், ''விரைவில், 'பேட்ஜ்வொர்க்' முறையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். பஸ்சுக்கு தலா, 15 ரூபாய் மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குரிய ரசீது வழங்கவும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.
சுங்க கட்டணம் கூடுதல் வசூல்
பஸ் ஸ்டாண்ட் உட்புறம், பெரம்பலுார், அரியலுார் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. 500 மீ., கொண்ட பஸ் ஸ்டாண்ட் சாலையில், 200 மீ.,க்கு மேல் மிக மோசமான நிலையில் உள்ளது. பஸ்சுக்கு தலா, 15 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்க நகராட்சி கூறியுள்ளது. ஆனால் சில நேரங்-களில், 20 ரூபாய் வசூலிக்கின்றனர். ராசிபுரம், ஈரோடு பஸ்கள் நிற்கும் இடத்தில் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - ஆர்.நல்லதம்பி, 33, டிரைவர், ஆத்துார்.
பழுதான மின்விளக்குகள்
ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலையில், 5 இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. பள்ளங்-களை கடக்கும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறிச்செல்கின்-றன. மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பஸ் வந்து செல்லும் பாதை முழுதும் சீரமைக்க வேண்டும். உள்ளே வரும் பாதையில் பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.- எஸ்.மணி, 35, பூ வியாபாரி, ஆத்துார்.

