/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காகாபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடமின்றி பயணியர் அவதி
/
காகாபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடமின்றி பயணியர் அவதி
காகாபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடமின்றி பயணியர் அவதி
காகாபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடமின்றி பயணியர் அவதி
ADDED : நவ 04, 2024 05:15 AM
வீரபாண்டி: சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, காகாபாளையம் சந்திப்பில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் பஸ் ஸ்டாப்பில் இளம்பிள்ளை, வேம்படிதாளத்தில் இருந்து வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையை கடந்து செல்லும் சுரங்க வழி நுழைவு முன் நிழற்கூடம் இல்லை.
அதே இடத்தின் பிரிவில் கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி, பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றன. சாலை வளைவில் இருபுறமும் உள்ள பஸ் ஸ்டாப்புகளை, அப்பகுதி மக்கள், அரசு பள்ளி மாணவர்கள், சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். இருப்பினும் நிழற்கூடமின்றி வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.
மேலும் சுரங்க வழி நுழைவில் பஸ் ஸ்டாப் உள்ளதால் பயணியரை ஏற்றி இறக்கும் போது பின்னால் வரும் கனரக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதேபோல் நெடுஞ்சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு செல்லும் வாகனங்கள் கடக்கும்போது, ஸ்டாப்பில் நிற்கும் பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் நிலவுகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர், அங்குள்ள பஸ் ஸ்டாப்புகளை சற்று தள்ளி இடமாற்றம் செய்வதோடு நிழற்கூடம் அமைத்து அங்கு மட்டும் பஸ்களை நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.