ADDED : நவ 13, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
சங்ககிரி; தமிழக அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், சங்ககிரி தாலுகா கிளை சார்பில், அங்குள்ள ஒன்றிய அலுவலக வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா கிளை தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
அதில், த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஓய்வூதிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறுதல்; ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், ஊர்புற நுாலகர், கிராம ஊழியர், வனக்காவலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்குதல்; 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட தலைவர் அருள்மொழி, செயலர் கோவிந்தராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.
