ADDED : ஆக 20, 2026 03:03 AM

அ நிறம் | அளவு
சேலம்: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் சிவில் ஓய்வூதியர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலர் சண்முகம் பேசியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் இடையே பாகுபாட்டை ஏற்படுத்தும், ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்-டத்தை ரத்து செய்ய வேண்டும். 2026க்கு முன் ஓய்வு பெற்றவர்க-ளுக்கும், 8வது ஊதியக்குழுவின் பலன் கிடைக்கும்படி திருத்தம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு தொடர்பான குளறுபடி-களை உடனே சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்-கேற்றனர்.
