/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் சிதறும் பி.சாண்ட் மணலால் மக்கள் கடும் அவதி
/
சாலையில் சிதறும் பி.சாண்ட் மணலால் மக்கள் கடும் அவதி
சாலையில் சிதறும் பி.சாண்ட் மணலால் மக்கள் கடும் அவதி
சாலையில் சிதறும் பி.சாண்ட் மணலால் மக்கள் கடும் அவதி
ADDED : மார் 05, 2024 02:02 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, சந்தியூர், பிச்சம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், கிரஷர்கள் செயல்படுகிறது. அங்கிருந்து டிப்பர் லாரிகளில் எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் மணல் அளவுக்கு அதிகமாக ஏற்றுகின்றனர். தார்பாய் போட்டு மூடுவதில்லை.
பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் வேகமாக லாரிகள் செல்கின்றன. அப்போது, லாரியிலிருந்து மணல் சாலையில் கொட்டுகிறது. அடுத்தடுத்து வாகனங்கள் செல்லும் போது, காற்றில் மணல் பறக்கிறது. சாலையோரத்தில் வயலில் உள்ள பயிர்களில், வெள்ளை நிறத்தில் மணல் படிந்து, மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
வீடுகளின் வெளியே மற்றும் உள்ளே பி.சாண்ட் பவுடர் வெள்ளை நிறத்தில் படிகிறது. இந்த செயற்கை மணல் பவுடரால், காற்று மாசடைந்து, சுற்றுச்சுழல் பாதிக்கிறது. நுரையீரல் தொற்று ஏற்பட்டு வயதானவர்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் மணல் ஏற்றி செல்லும் லாரிகள், தார்பாய் போட்டு மூட, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

