/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
ADDED : செப் 27, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி, 10வது வார்டு, வடக்கு தில்லை நகரில், 500க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என, அப்பகுதி பெண்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, அதே பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.