/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் அதிகாரிகள் காலில் விழுந்து மனு வழங்கிய மக்கள்
/
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் அதிகாரிகள் காலில் விழுந்து மனு வழங்கிய மக்கள்
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் அதிகாரிகள் காலில் விழுந்து மனு வழங்கிய மக்கள்
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் அதிகாரிகள் காலில் விழுந்து மனு வழங்கிய மக்கள்
ADDED : ஜன 27, 2025 03:20 AM
சேலம்: கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை, மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என, கிராம சபை கூட்டத்தில், அதிகா-ரிகள் காலில் விழுந்து மக்கள் மனு வழங்கினர்.
சேலம், கன்னங்குறிச்சி அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி, சத்யா நகரில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
துணை பி.டி.ஓ., பிரேமகுமாரி தலைமை வகித்தார். அதில் கொண்டப்ப-நாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள், அதிகாரிகள் காலில் விழுந்து அளித்த மனு:எங்கள் பகுதியில், 1,795 குடும்பங்களை சேர்ந்த, 9,700க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இந்த ஊராட்சியை, சேலம் மாநக-ராட்சியுடன் இணைப்பதற்கான பணி நடக்கிறது. இதனால், 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும், 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். விவசாய தொழில் பாதிக்கப்படும். கட்டுமான ஒப்புதல் கட்டணம் உயர்வதோடு, பல்வேறு வகை வரிகளை மக்கள் மீது திணிக்கும் சூழல் ஏற்படும். அதனால் எங்கள் ஊராட்-சியை, மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்ப-டவில்லை. அதையும் சரிசெய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், 'கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும்' என்றனர்.
385 ஊராட்சிகளிலும் கிராம சபை
ஓமலுார் அருகே பாகல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, 385 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கிராமங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மக்கள் பார்வைக்கு வைத்து விவாதிக்கப்பட்டது. மக்களால் பல்வேறு இனங்கள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்க, தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீரபாண்டி ஊராட்சியில், மாவட்ட ஊராட்சி செயலர் அருளாளன் தலைமையில் கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் ஆறுமுகம், வரவு, செலவு திட்ட அறிக்கை, நடந்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து வாசித்தார். மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
உபரிநீர் திட்டம்
இடைப்பாடி, பக்கநாட்டில் ஊராட்சி ஒன்றிய பணி ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், மேட்டூர் அணையின் காவிரி உபரிநீர் திட்டமான, 100 ஏரி திட்டத்தில் பக்கநாடு ஊராட்சியில் உள்ள, 5 ஏரிகள், மதுரகாளியம்மன் கோவில் அணையை சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.