sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுாலகத்துக்கு 'போர்வெல்' அமைக்க மக்கள் எதிர்ப்பு

/

நுாலகத்துக்கு 'போர்வெல்' அமைக்க மக்கள் எதிர்ப்பு

நுாலகத்துக்கு 'போர்வெல்' அமைக்க மக்கள் எதிர்ப்பு

நுாலகத்துக்கு 'போர்வெல்' அமைக்க மக்கள் எதிர்ப்பு


ADDED : டிச 27, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, லாங்கில்பேட்டையில் அரசுக்கு சொந்தமான துணை நுாலகம் உள்ளது. அதன் கட்டடம் சேதமடைந்துள்ளதால் விரைவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, நுாலகம் அருகே ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தொடங்கப்பட்டது. அதன் அருகே உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துதான், லாங்கில்பேட்டை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதனால் கிணற்றில் தண்ணீர் வற்றி விடும் என்ற அச்சத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என, அப்பகுதி மக்கள் இரவு, 11:30 மணிக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை சிறை பிடித்து, எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்காடு போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தி, ஆழ்துளை கிணறு போட வந்தவர்களிடம் பணியை நிறுத்தும்படி கூறினர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us