ADDED : பிப் 20, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்-டலம், 58வது வார்டு பார்வதி தெருவில், மண் சாலை உள்ளது. அதில் சாக்கடை கழிவுநீர் தேங்-குவதோடு, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்-குவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளடம் தெரிவித்தும் நடவ-டிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.அன்னதானப்பட்டி போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை. பின் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் வந்து பேச்சு நடத்தி, சாலை வசதி செய்து தர உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.
