ADDED : நவ 14, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரையிலும், இரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்தடை ஏற்பட்டது. சிறிது
நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. பகலில் பலமுறை மின் தடை ஏற்பட்டதால் வீடுகளில், 'டிவி', மின்விசிறி, மின்விளக்கு, கிரைண்டர் உள்ளிட்டவை விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. சிறு, குறு தொழில்
செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். சீரான மின்சாரம் வழங்க, மக்கள் வலியுறுத்தினர்.