தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/'வாக்கிங்' செல்ல கட்டணம்: மக்கள் முற்றுகை

'வாக்கிங்' செல்ல கட்டணம்: மக்கள் முற்றுகை

'வாக்கிங்' செல்ல கட்டணம்: மக்கள் முற்றுகை


ADDED : ஜூலை 02, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், பள்ளப்பட்டி ஏரி பூங்கா மறு சீரமைக்கப்பட்ட நிலையில், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதன் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு, 10 ரூபாய், சிறியவர்க-ளுக்கு, 5 ரூபாய் என, ஒப்பந்ததாரரால் வசூலிக்கப்படுகிறது. இத-னிடையே தினமும் காலை, அங்கு நடைபயிற்சிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நேற்று, ஒப்பந்ததாரர், மாத கட்டணம், 100 ரூபாய் நிர்ணயிக்கப்-பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் அவர்கள், பூங்காவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளப்பட்டி போலீசார் வந்து, பேச்சு நடத்தினர். அப்போது ஒப்பந்த விதிமுறையில் வாக்கிங் செல்ல, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விபரத்தை தெரிவித்தனர். மேலும் இலவச நடைபயிற்சிக்கு, மாநகராட்சில் மனு வழங்க, போலீசார் அறிவுறுத்-தினர். இதை ஏற்று, மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us