/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் தொட்டி கட்ட மக்கள் கோரிக்கை
/
குடிநீர் தொட்டி கட்ட மக்கள் கோரிக்கை
ADDED : நவ 24, 2024 12:48 AM
குடிநீர் தொட்டி கட்ட
மக்கள் கோரிக்கை
கெங்கவல்லி, நவ. 24-
கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 9வது வார்டு, பாலாஜி நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள பொது குடிநீர் குழாயில் தினமும் பலர், மொபட், பைக்குகளில் குடங்களை எடுத்து வந்து பிடித்துச்செல்கின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், '4 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால், குடிநீர் வரும் நேரத்தில் காத்திருந்து பிடிக்க வேண்டியுள்ளது. அதனால் தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகிக்க கூறியும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றனர்.
டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்
பிரகந்தநாயகி கூறுகையில், ''சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும் பாலாஜி நகரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.