/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டி துவக்கம்
/
பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டி துவக்கம்
பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டி துவக்கம்
பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டி துவக்கம்
ADDED : டிச 10, 2024 01:59 AM
பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டி துவக்கம்
ஓமலுார், டிச. 10--
பெரியார் பல்கலையில், கல்லுாரிகளுக்கு இடையே துவங்கிய தடகள போட்டிகளில், 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சேலம், பெரியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான இரண்டு நாள் தடகள போட்டி நேற்று துவங்கியது. பல்கலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சின்தடிக் மைதானத்தில் நடந்த
போட்டியை, பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக மைதானத்தில், 45 கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற, 500 மாணவ, மாணவியரின் கொடி அணிவகுப்பை துணைவேந்தர் ஜெகநாதன் பார்வையிட்டார். பின், 100, 400, 800 மீட்டர் ஓட்டப்போட்டி, டிரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இன்று இரண்டாவது நாள் போட்டி நடைபெறுகிறது. பல்கலை உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம், பல்வேறு கல்லுாரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்றனர்.