ADDED : டிச 24, 2024 07:55 AM
பெருந்துறை: பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் பள்ளியின், 15வது ஆண்டு விழா நடந்தது. சாகர் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் பழனிசாமி, துணை தலைவர் கிருஷ்ணன், இணை செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்-தனர். லதா செளந்திரராசன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பிளஸ் ௧ மாணவி அஸ்மிதா வரவேற்றார்.
பள்ளி முதல்வர் ஷீஜா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி, சாகர் அகாடெமி சாதனைகளை பேசினார். கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், விளையாட்டு போட்டியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் நீட், ஐ.ஐ.டி., ஆர்.இ.பி., படித்து சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். பள்ளி ஆண்டு மலரை தாளாளர் செளந்திரராசன் வெளியிட, முதல் பிரதியை அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். நிறைவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.