/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு நாளில் பி.எப்., பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு நாளில் பி.எப்., பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வு நாளில் பி.எப்., பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வு நாளில் பி.எப்., பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 03:33 AM
சேலம்:தமிழ்நாடு
அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கம் சார்பில், சேலம்
கோட்டை மைதானத்தில் மாவட்ட அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட
தலைவர் காவேரி தலைமை வகித்தார்.
மாநில செயலர் சுப்ரமணியன்
பேசுகையில், ''ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர்,
உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் உள்பட பட்டதாரி ஆசிரியராக
பணிபுரிந்த அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய்
வழங்கி, குடும்ப ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் மருத்துவப்படி வழங்குவதோடு, இலவச மருத்துவ
காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். வருங்கால
வைப்புநிதி தொகையை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட
செயலர் லீலாதேவி, துணைத்தலைவர்கள் புவனாம்மாள், தங்கராசு, இணை
செயலர்கள் ராஜலட்சுமி, அன்னகாமு உள்பட பலர் பங்கேற்றனர்.