/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் பதிப்பு பணி: போக்குவரத்து மாற்றம்
/
குழாய் பதிப்பு பணி: போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 10, 2024 07:33 AM
சேலம் : சேலம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியால் திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி மார்க்கத்தில் செல்லும் பஸ்கள், வள்ளுவர் சிலை, 4 ரோடு, சத்திரம், லீபஜார், சந்தைப்பேட்டை, நெத்திமேடு வழியே செல்லும்.
மறுமார்க்கத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், பெரியார் வளைவு, புலிகுத்தி சந்திப்பு வழியே செல்லும். புலிகுத்தி சந்திப்பில் இருந்து பிரபாத் சந்திப்புக்கு செல்ல வேண்டிய இரு, நான்கு சக்கர வாகனங்கள், புலிகுத்தி பிரதான சாலை, சிவனார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழியே திருச்சி சாலைக்கு வந்து செல்லும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.