/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைலாய வாத்தியங்கள் வாசிக்க சுகவனேஸ்வரர் கோவிலில் தடை
/
கைலாய வாத்தியங்கள் வாசிக்க சுகவனேஸ்வரர் கோவிலில் தடை
கைலாய வாத்தியங்கள் வாசிக்க சுகவனேஸ்வரர் கோவிலில் தடை
கைலாய வாத்தியங்கள் வாசிக்க சுகவனேஸ்வரர் கோவிலில் தடை
ADDED : நவ 10, 2025 11:39 PM
சேலம்: கைலாய வாத்தியங்கள் வாசிப்பதால், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, கோவில் நிர்வாகம் அதற்கு தடை விதித்துள்ளது.
சேலம் நகரின் மையப்பகுதியில், திருமணிமுத்தாறு கரையில் பழமையான சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில், ஆறு கால பூஜை மற்றும் இரவு பள்ளியறை பூஜையின் போது, பக்தர்களால், கைலாய வாத்தியங்கள் இசைக்கப்படும்.
சில நாட்களுக்கு முன், கோவில் நிர்வாகம் சார்பில், 'கோவிலில் பூஜைகள், வழிபாடுகள் நடக்கும் போது, ஒரு சிலர் கைலாய வாத்தியங்களை அதிக ஒலியுடன் வாசிக்கின்றனர். இது பக்தர்களுக்கும், பூஜை வழிபாட்டுக்கும் இடையூறாக உள்ளதால், கோவிலுக்குள் கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை செய்யப்படுகிறது. கோவில் முன்புறம் நாலுகால் மண்டபம் அருகே, கைலாய வாத்தியங்களை மங்கல வாத்தியங்களுக்கு இடையூறு இன்றி வாசிக்கலாம்' என, அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிவ பெருமானுக்கு உகந்த கைலாய வாத்தியங்களை, கோவிலுக்குள் இசைக்க தடை விதித்திருப்பது, சிவ பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

