/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று, நாளை 'ஸ்பெஷல் டிரைவ்' கணக்கீட்டு படிவத்தை வழங்குங்க...
/
இன்று, நாளை 'ஸ்பெஷல் டிரைவ்' கணக்கீட்டு படிவத்தை வழங்குங்க...
இன்று, நாளை 'ஸ்பெஷல் டிரைவ்' கணக்கீட்டு படிவத்தை வழங்குங்க...
இன்று, நாளை 'ஸ்பெஷல் டிரைவ்' கணக்கீட்டு படிவத்தை வழங்குங்க...
ADDED : நவ 28, 2025 12:57 AM
சேலம், வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்கான, 'ஸ்பெஷல் டிரைவ்', இன்று, நாளை நடக்கிறது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பணி, சேலம் மாவட்டத்தில் நவ., 4 முதல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெற, அனைத்து ஓட்டுச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கீட்டு படிவங்களை ஒப்படைப்பதற்கான, 'ஸ்பெஷல் டிரைவ்', நவ., 28, 29ல்(இன்று, நாளை) நடக்கிறது.
இதுவரை கணக்கீட்டு படிவத்தை ஒப்படைக்காத வாக்காளர்கள், படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. கணக்கீட்டு படிவம் வழங்காத வாக்காளர்களது பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்
பெறாது. அதனால் அனைவரும் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.