/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்.,பணிக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த பி.எல்.ஓ.,
/
எஸ்.ஐ.ஆர்.,பணிக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த பி.எல்.ஓ.,
எஸ்.ஐ.ஆர்.,பணிக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த பி.எல்.ஓ.,
எஸ்.ஐ.ஆர்.,பணிக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த பி.எல்.ஓ.,
ADDED : டிச 02, 2025 02:21 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், 55. அப்பள்ளியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியின் (எண் 293) பி.எல்.ஓ.,வாக நியமிக்கப்பட்ட அவருக்கு, எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி வழங்கப்பட்டது. அந்த ஒரு ஓட்டுச்சாவடியில் 1,096 வாக்காளர்கள் உள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியின் பி.எல்.ஏ.,-2, வி.ஏ.ஓ., இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், புதிய பாரதம் எழுத்தறிவு தன்னார்வலர் மற்றும் முன்னாள் மாணவர்களை உடன் அழைத்து சென்று, வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் பணியில் ஈடுபட்டார்.
வீடு வீடாக, ஒவ்வொரு விவசாய தோட்டமாக சென்று, வாக்காளர்களை நேரில் பார்த்து, கணக்கீட்டு படிவம் வழங்கி, படிவத்தை பூர்த்தி செய்வது குறித்தும் ஆசிரியர் தெய்வநாயகம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பூர்த்தி செய்த படிவம் திரும்ப பெறப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக ஓட்டுச்சாவடி பகுதியில் நடந்த, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி 100 சதவீதம் நிறைவு பெற்றது. எஸ்.ஐ.ஆர்.,பணி செய்து முடிக்க ஒத்துழைப்பு அளித்து உடன் வந்து உதவிய பி.எல்.ஏ.,-2 உள்ளிட்ட 12 பேருக்கு, நேற்று குரால்நத்தத்தில் ஆசிரியர் தெய்வநாயகம் சொந்த செலவில் பிரியாணி விருந்து அளித்து, நன்றி தெரிவித்தார்.

